Connect with us

நீட் தேர்வுக்கு ஹால் டிக்கெட்-இன்று காலை 11:30 மணி முதல் டவுன்லோட் செய்யலாம்!!

நீட்

செய்திகள்

நீட் தேர்வுக்கு ஹால் டிக்கெட்-இன்று காலை 11:30 மணி முதல் டவுன்லோட் செய்யலாம்!!

தற்போது இந்தியாவில் அனைத்து விதமான பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு என்பது கட்டாயமாக்கப்பட்டதாக மாறியுள்ளது. அதிலும் குறிப்பாக மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு ஆக அமைந்துள்ளது நீட் தேர்வு.

இந்த நீட் தேர்வுக்கு தமிழகத்தில் உள்ள பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காரணம் என்னவெனில் ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வினால் அச்சமடைந்து தற்கொலை செய்து கொள்ளும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகமாகவே காணப்படுகிறது.

இருப்பினும் கூட நீட் தேர்வு நடப்பாண்டிலும் நடைபெற உள்ளதாக தெரிகிறது. இதற்காக விண்ணப்பம் செய்து கொள்வோரின் எண்ணிக்கையும் கடந்தாண்டை விட சற்று அதிகமாக இருந்தது.

இந்த நிலையில் இன்றைய தினம் முதல் நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்யலாம் என்று தேர்வு முகமை அறிவித்துள்ளது. நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இன்று காலை 11:30 மணி முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்.

https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர வருகின்ற 17ஆம் தேதி நாடெங்கும் நீட் தேர்வு நடைபெறுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top