
செய்திகள்
இன்று முதல் மீண்டும் 144 தடை உத்தரவு அமல்-!! கொந்தளிப்பில் தொண்டர்கள்;
நம் இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 144 தடை உத்தரவு பிறப்பித்து இருந்தது. ஏனென்றால் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பொது மக்கள் வெளியில் கலவரத்தில் ஈடுபட கூடாது என்றும் வெளியே அத்துமீறி நடமாடக் கூடாது என்பதற்காகவும் 144 தடை உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந்த நிலையில் இந்த 144 தடை இன்று முதல் மீண்டும் அமல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது. அதன்படி மும்பையில் இன்று முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் மும்பையில் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விதமான குழப்பங்கள் மற்றும் காரசாரமான நிகழ்வுகள் நடந்து கொண்டு வருகின்றன.
மராட்டியத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசை கலைப்பதற்கு முயற்சிப்பதாக மும்பையில் சிவசேனா தொண்டர்கள் கொந்தளிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், போராட்டங்கள், அசம்பாவித சம்பவங்களை தடுக்க வும் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
