இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை?

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த சில வாரங்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அவ்வப்போது விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இருப்பினும் இந்த வாரம் திங்கட்கிழமை முதல் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகள் வகுப்புகள் தொடங்கப்பட்டது என்பதும் மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வருகை தந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் தோன்றியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு காரணமாக இன்று 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என நேற்று அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் சற்று முன் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே இதுவரை திருவாரூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை ஆகிய 3 மாவட்டங்களுக்கு மட்டுமே பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment