பிக்பாஸ்: காப்பாற்றப்பட்ட மூவர் யார் யார்? கமல்ஹாசன் அறிவிப்பு!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் ஒருவர் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்படுவார் என்பதை பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் கடந்த மூன்று வாரங்களாக நாடியா சாங், அபிஷேக் மற்றும் சின்ன பொண்ணு ஆகியோர் வெளியேற்றப்பட்டு இருந்த நிலையில் சற்று முன் வெளியான வீடியோவில் கமல்ஹாசன் இதுவரை அதிகாரபூர்வமாக காப்பாற்றப்படுபவர்கள் குறித்த பெயரை வருண் மூலம் அறிவிக்கின்றார்.

இதன்படி முதலில் சிபி காப்பாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டவுடன் அதன் பின்னர் வெளியில் போவேன் என்று சொன்ன மதுமிதா காப்பாற்றப்படுகிறார் என்றும் அதன் பின்னர் காலையில் இருந்தே புலம்பிக் கொண்டிருந்த ஐக்கி பெர்ரி காப்பாற்றப்படுவதாகவும் வருண் அறிவிக்கிறார்

ஏற்கனவே நேற்று நிரூப் மற்றும் இசைவாணி ஆகிய இருவர் காப்பாற்றப்பட்ட நிலையில் இன்று சிபி, மதுமிதா மற்றும் ஐக்கி ஆகிய மூவர் காப்பாற்றப்பட்டு உள்ளதால் மொத்தமாக 5 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. இன்று இரவு நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாக வெளியேறும் போட்டியாளரை கமல்ஹாசன் அறிவிப்பார் என்றாலும் ஸ்ருதி வெளியேறிவிட்டதாக தகவல்கள் கசிந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment