இன்று திருக்கார்த்திகை தீப பெருவிழா

அஞ்ஞானம் அகற்றி மெய்ஞானத்திற்கு ஒரு திறவுகோலாய் இந்த திருக்கார்த்திகை விளங்குகிறது. மனதில் உள்ள இருள் அகற்றி எங்கும் எங்கெங்கிலும் தீபம் போல் மனம், புத்தி, ஆன்மா பிரகாசமடைந்து இறை சிந்தனை மேலோங்க செய்வதே கார்த்திகை திருநாள் என சொல்லலாம்.

கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள்தான் கார்த்திகை இதை கார்த்திகை விளக்கீடு என இலங்கை உள்ளிட்ட நாடுகளில் சொல்கிறார்கள் இங்கு கார்த்திகை தீபம் என அழைக்கிறார்கள்.

மாலை வேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள். திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில் தீபத்திருவிழா நடைபெறும்.

மக்கள் வீடுகளில் விளக்கேற்றி வழிபடுவர். திருப்பரங்குன்றம், திருவண்ணாமலை மற்றும் பல முக்கிய கோவில்களில் மலை மேல் கார்த்திகை தீபம் ஏற்றப்படும். பக்தர்கள் சொக்கப்பனை கொளுத்துவர்.

திருவண்ணாமலையில் இந்த விழா மிகவும் புகழ்பெற்றது இந்திய அளவில் பல பக்தர்கள் ஜோதி வடிவாய் நெருப்பாய் மலைமேல் காட்சியளிக்கும் சிவபெருமானை அக்னி வடிவில் தரிசிக்க அதிக அளவில் பக்தர்கள் குவிவார்கள்.

இன்று கார்த்திகை தீபம் ஏற்றுபவர்கள் தம் இல்லங்களில் 27 தீபம் ஏற்றுவது தான் சிறப்பு இவை 27 நட்சத்திரங்களைக் குறிக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews