மலைபோல் சரிந்த தங்கம் விலை!! கொண்டாட்டத்தில் அள்ளிச் செல்லும் நகை பிரியர்கள்!!

உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதே சமயம் தங்கத்தின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் தங்கம் விலையானது  மளமளவேன இன்று குறைந்துள்ளது.

அதன் படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.4,560 ஆக விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ. 160 ரூபாய் குறைந்து ரூ. 38,560-க்கு விற்பனையாகிறது.

அதே போல் தூயத்தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராமுக்கு கிராமுக்கு 22 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 5,258 -ஆகவும் பவுனுக்கு ரூ. 42,064- ஆக விற்பனையாகிறது.

தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் ஒரு வெள்ளியின் விலை மாற்றமில்லாமல் ஒரு கிராம் வெள்ளி 61.30 காசுகளாகவும், ஒரு கிலோ ரூ.61,300 ஆயிரமாக விற்பனை செய்யப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.