இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை?

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இன்றும் 10 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்கள் பின்வருமாறு: காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி

இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள மாவட்டங்கள் பின்வருமாறு: செங்கல்பட்டு, கடலூர், திருவண்ணாமலை

திருவள்ளூர் மாவட்டத்தில் பொது தேர்வு நடைபெற இருக்கும் சிபிஎஸ்இ பள்ளிகள் தவிர மற்ற பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment