தொடர் ஏற்றத்திற்கு பின் தொடர் சரிவில் பங்குச்சந்தை.. இனி என்ன நடக்கும்?

கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை உயர்ந்து கொண்டே வந்த நிலையில் சென்செக்ஸ் 62 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பங்குச் சந்தை சரிந்து வந்த நிலையில் இன்று 3-வது நாளாகவும் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இன்று காலை பங்குச் சந்தை தொடங்கிய நிலையில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 62443 என்ற புள்ளிகளிலும், தேசிய பங்கு சந்தை நிப்டி 18580 என்ற புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதம் குறித்த உயர்வை அறிவித்ததன் காரணமாக பங்குச் சந்தை ஏற்றம் பெறும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் பங்குச் சந்தை தொடர்ந்து இறக்கத்தில் இருப்பது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

sensex and nifty1எனினும் பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தைக் கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு நாட்களாக பங்குசந்தை சரிந்தாலும் பிபிசிஎல், லார்சன்,ஏசியன் பெயிண்ட்ஸ், ஐசிஐசிஐ வங்கி, சிப்ளா, டாடா கான்ஸ், எஸ்பிஐ, அல்ட்ரா டெக் சிமெண்ட், இன்ஃபோசிஸ், ஐடிசி, எச்டிஎஃப்சி லைஃப், நெஸ்டிலே, பாரதி ஏர்டெல், பஜாஜ் பின்சர்வ் ஆகீய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.

அதேபோல் டாடா மோட்டார்ஸ், என்டிபிசி,எச்சிஉல் டெக், கோடக் மகேந்திரா, யுபிஎல், விப்ரோ, ஹின்டல்கோ, டிசிஎஸ், டிசிஎஸ், டாடா ஸ்டீல், ஓஎன்ஜிசி, பஜாஜ் ஆட்டோ, கோல் இந்தியா, ரிலையன்ஸ், எம்&எம், டெக் மகேந்திரா, அப்போலா மருத்துவமனை, டெட்டன கம்பெனி, மாருதி சுசிகி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.