Connect with us

நீலகிரியில் சில தாலுகாக்களுக்கு மட்டும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!!!

rain and school

தமிழகம்

நீலகிரியில் சில தாலுகாக்களுக்கு மட்டும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!!!

‌ கடந்த வாரம் முழுவதும் தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

அதன்படி கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை தாலுகா பகுதியில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு நாள் பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

அதன் பின்னர் தொடர்ந்து மூன்று நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றைய தினமும் நீலகிரியில் உள்ள குறிப்பிட்ட சில தாலுகாக்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

அதன்படி நீலகிரியில் பெய்து வரும் மழையின் காரணமாக உதகை, பந்தலூர், குந்தா மற்றும் கூடலூரில் பள்ளிகளுக்கு இன்றைய தினமும் விடுமுறை என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top