இத்தனை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறையா? முழு விபரங்கள்

தமிழகத்தை நோக்கி மாண்டஸ் புயல் நெருங்கி வரும் நிலையில் சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக சென்னையில் நேற்று இரவு தொடங்கிய மழை விடிய விடிய பெய்து வருகிறது என்பதும் தற்போது சென்னையில் உள்ள பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

holiday

இந்த நிலையில் கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள 24 மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள மாவட்டங்களின் பெயர்கள் பின்வருமாறு: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, சேலம், நாமக்கல், தருமபுரி, திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை.

மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புயல் கரையை கடக்கும் வரை சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மிக கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்களின் பாதுகாப்பை கருதி சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் மூடப்படும் என்றும் மெரினா கடற்கரை உள்பட சென்னையில் உள்ள கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.