இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; மாணவர் சேர்க்கைக்கு மட்டும் அனுமதியா!!!

தென்மேற்கு பருவமழை தீவிரம் தமிழகத்தில் அதிகமாக காணப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை பெய்து கொண்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக இரவு நேரங்களில் விடாமல் மழை பெய்து கொண்டு வருகிறது. இதனால் காலையில் மழை தண்ணீர் தாழ்வான பகுதிகளில் தேங்கி உள்ளன. ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை காலை நேரத்திலும் செய்வதால் அங்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இன்றைய தினம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவித்தார் நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ். நாகப்பட்டினம் மாவட்டத்தை தொடர்ந்து மற்றொரு மாவட்டத்திலும் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.

அதன்படி இன்று திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு கனமழையின் காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் கூறியுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மட்டும் வழக்கமும் நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment