இன்று பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை.. அதிரடி அறிவிப்பு

திருவண்ணாமலையில் இன்று கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளதை அடுத்து இன்று திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளுக்கு மட்டும் பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று திருக்கார்த்திகை தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதனையடுத்து இன்று மாலை திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மகா தீபத்தை பார்ப்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

இந்த நிலையில் திருவண்ணாமலை மகா தீபத்தை ஒட்டி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சில குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செஞ்சி, மேல்மலையனூர், அவலூர்பேட்டை, மேல் பாப்பம்பட்டி, ஆலம்பூண்டி ஆகியவற்றில் உள்ள அரசு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இன்று விடுமுறை அளிக்கப்படும் பள்ளிகளுக்கு வரும் சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.