தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் இன்றும் பள்ளிகள் விடுமுறை!

தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இதன் காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று முதல் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் ஒரு சில பகுதிகளுக்கு மட்டும் இன்று பள்ளிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என்றும், காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத், உத்திரமேரூரில் முகாம்களாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை எனவும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment