Connect with us

கனமழை காரணமாக இடுக்கியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

156689 school holiday

செய்திகள்

கனமழை காரணமாக இடுக்கியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

நேற்று தமிழகத்தின் நீலகிரி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ளபாய எச்சரிக்கை விடுவிக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த மாவட்டங்களில் கண்காணிப்பு குழு விரைந்து அனுப்பப்பட்டுள்ளனர்.

மேலும் நீலகிரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய இரண்டு மாவட்டங்களில் இரண்டு மீட்பு படையினர் பாதுகாப்பு பணிக்காக அரக்கோணத்தில் இருந்து விரைந்து சென்றனர். இந்த நிலையில் நேற்று இரவே கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

ஏனென்றால் அங்கு பெய்த கனமழையின் காரணமாக இத்தகைய அறிவிப்பினை கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். அதற்கு அடுத்து சில மணி நேரத்திலேயே கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் கூறியிருந்தது.

ஏனென்றால் அங்கு அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்ததன் விளைவாக இத்தகைய முடிவு எடுக்கப்பட்டது. இந்த நிலையில் மற்றுமொரு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஆனால் இவை தமிழகத்தில் அல்ல அண்டை மாநிலமான கேரளாவில் அறிவிக்கப்பட்டது. அதன்படி கேரளாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக இடுக்கி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றைய தினம் விடுமுறையை அறிவித்தார் மாவட்ட ஆட்சியர் ஜீபா ஜார்ஜ்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top