இன்று சங்கடஹர சதுர்த்தி

மார்கழி மாதம் பொதுவாக ஆன்மீக ரீதியான வழிபாட்டுக்கு உகந்த மாதம் . இந்த மாதத்தில் ஆன்மீக ரீதியாக பக்தர்கள் அனைத்து கோவில்களிலும் அலை மோதுவர். மார்கழி மாதத்தில் இறைவனை வணங்குவது மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தரும்.

இந்த மாதத்தில் வரும் முக்கிய விசேசங்களை போல இந்த மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தியும் மிக விசேஷமானது. ஏனென்றால் மார்கழி மாதம் ஆன்மீக ரீதியான புனிதமான மாதமாக பார்க்கப்படுகிறது.

இன்றூ வரும் சங்கடஹர சதுர்த்தியில் வீட்டுக்கு அருகாமையில் உள்ள விநாயகர் கோவிலிலோ அல்லது உங்களுக்கு பிடித்தமான விநாயகர் கோவிலிலோ சென்று வழிபடுவது நல்லது.

விநாயகர் கேது தோசம் நீக்குபவர் . கேது பகவான் உலக இயல்பு வாழ்க்கையிலிருந்து குடும்ப ரீதியான உறவுகளிலிருந்து பிரித்து நம்மை சாமியார் போன்ற மன நிலைக்கு தள்ளுபவர். இதனால் குடும்பத்தில் ஒற்றுமை இல்லாமல் போக கூடும்.

இது போன்ற துயரங்களில் இருந்து நமக்கு விடுதலை தந்து நம்மை குடும்பத்தோடு நம்மை வாழவைப்பவர் விநாயகர். ஏனென்றால் அவர்தான் கேதுக்கு அதிபதி.

இன்று வரும் சங்கடஹரசதுர்த்தியில் விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து பால் அபிசேகம் செய்து வழிபடுங்கள்.

வாழ்வில் ஏற்படும் துயரங்கள் நீங்கி இன்பம் பிறக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews