Connect with us

இன்றைய வெள்ளிக்கிழமை (23/02/2018) ராசிபலன்கள் என்ன தெரியுமா?

Spirituality

இன்றைய வெள்ளிக்கிழமை (23/02/2018) ராசிபலன்கள் என்ன தெரியுமா?

3946ce172604da4bf2994079445f3e62

மேஷம்
கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனஉளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அவசரத்திற்கு வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே
ராசி பலன்கள்

ரிஷபம்
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சோர்வு, களைப்பு வந்து நீங்கும். வேலைச்சுமை அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வரக்கூடும். அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். உங்களுடைய கருத்துக்களுக்கு எதிர்கருத்து அதிகமாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் கூடுதல் நேரம் வேலை பார்க்க வேண்டி வரும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
ராசி பலன்கள்

மிதுனம்
எளிதாக முடிய வேண்டிய சில காரியங்களைக் கூட போராடி முடிக்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களால் பிரச்னைகள் வந்துச் செல்லும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் போது கவனம் தேவை. வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
ராசி பலன்கள்

கடகம்
உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். விருந்தினர் வருகை உண்டு. வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன் உரிமை தருவார்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
ராசி பலன்கள்

சிம்மம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
ராசி பலன்கள்

கன்னி
கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிட்டும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
ராசி பலன்கள்

துலாம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையென்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை
ராசி பலன்கள்

விருச்சிகம்
மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் அனுகூலம் உண்டு. மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
ராசி பலன்கள்

தனுசு
பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். ஷேர் பணம் தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்
ராசி பலன்கள்

மகரம்
புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை உட்கொள்ளுங்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்தை முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்
ராசி பலன்கள்

கும்பம்
எதிர்ப்புகள் அடங்கும். பழைய நண்பரை சந்திப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். வியாபாரத்தில் கமிஷன், புரோக்கரேஜ் வகைகளால் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்
ராசி பலன்கள்

மீனம்
புதிய முயற்சிகள் வெற்றியடையும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பிரபலங்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து லாபம் சம்பாதிப்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே
ராசி பலன்கள்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top