*_
மேஷம் -ராசி:
_*


குணநலன்களில் மாற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். தற்பெருமை பேசுவதை குறைத்துக் கொள்வது நல்லது. பழைய நினைவுகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். எந்தவொரு செயலையும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தீர்வு காண்பீர்கள். வெற்றிகரமான நாள்.






*════════════════*
*_
ரிஷபம் -ராசி:
_*


எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் ஏற்படும். இடமாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் தூக்கமின்மையும், சோர்வும் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் பேச்சுக்களில் கவனம் வேண்டும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.






*════════════════*
*_
மிதுனம் -ராசி:
_*


திறமைகளை வெளிப்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வசதியை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதரவு மேம்படும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவு கிடைக்கும். நண்பர்களின் வருகையால் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். விருத்தி நிறைந்த நாள்.






*════════════════*
*_
கடகம் -ராசி:
_*


வியாபார பணிகளில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மாற்றம் உண்டாகும். தவறிப்போன சில பொருட்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். போட்டி தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். எதிர்பார்த்த உதவி காலதாமதமாக கிடைக்கும். வரவு மேம்படும் நாள்.






*════════════════*
*_
சிம்மம் -ராசி:
_*


சமூகம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். குருமார்களின் ஆசீர்வாதம் மனதில் தெளிவினை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு உயர்கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தந்தைவழி சொத்துக்கள் கிடைப்பதில் இருந்துவந்த தாமதங்கள் நீங்கும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். விவேகம் வேண்டிய நாள்.






*════════════════*
*_
கன்னி -ராசி:
_*


வாழ்க்கை துணைவர் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உங்கள் மீதான வதந்திகளுக்கு தீர்வு கிடைக்கும். சகோதரர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான சூழ்நிலைகள் ஏற்படும். மருத்துவம் தொடர்பான சிகிச்சைகளில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். உதவி கிடைக்கும் நாள்.






*════════════════*
*_
துலாம் -ராசி:
_*


தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத சில உதவியின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த துறைகளில் லாபம் மேம்படும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். ஆதாயகரமான நாள்.






*════════════════*
*_
விருச்சிகம் -ராசி:
_*


உத்தியோக பணிகளில் எதிர்பாராத சில பொறுப்புகளின் மூலம் உயர்வு உண்டாகும். இன்று சந்திராஷ்டமம் நடைபெறுவதால் நிதானம், கவனம், பொறுமை, மிக அவசியம். நெருக்கமானவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். பயணங்களின்போது உடைமைகளில் கவனம் வேண்டும். மற்றவர்களின் கருத்துக்களை கேட்டு முடிவெடுப்பது நல்லது. ஆடம்பர பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். பெருமை நிறைந்த நாள்.






*════════════════*
*_
தனுசு -ராசி:
_*


சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். மனதில் புதுவிதமான எண்ணங்களும், ஆசைகளும் உண்டாகும். கற்பனை தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் இழுபறியான சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். நன்மை நிறைந்த நாள்.






*════════════════*
*_
மகரம் -ராசி:
_*


எதிர்பாராத தனவரவு உண்டாகும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். தாய்வழி உறவினர்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். வியாபார பணிகளில் இழுபறியான விஷயங்களை செய்து முடிப்பீர்கள். வெளியூர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகளால் மனதில் இருந்துவந்த குழப்பத்திற்கு தெளிவு கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.






*════════════════*
*_
கும்பம் -ராசி:
_*


மனதில் புதுவிதமான சிந்தனையும், தன்னம்பிக்கையும் ஏற்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றியமைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் மறைமுக ஆதரவு கிடைக்கும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். கீர்த்தி நிறைந்த நாள்.






*════════════════*
*_
மீனம் -ராசி:
_*


புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய வீடு மற்றும் மனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். ஆதரவு மேம்படும் நாள்.






Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.