இன்று 5 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி இன்று ஐந்து மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, சேலம், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் மற்ற மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் அந்தமான் அருகே தோன்றிய காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வருவதாகவும் அதேபோல் அரபிக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment