இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: எந்தெந்த இணையதளங்களில் பார்க்கலா?

தேர்வு முடிவுகள் இன்று வெளியாக இருப்பதை அடுத்து எந்தெந்த இணையதளங்களில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் பார்க்கலாம் என்பது குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.

பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என ஏற்கனவே தேர்வு துறை அறிவித்திருந்த நிலையில் இன்னும் சில மணி நேரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. இந்த நிலையில் கீழ்கண்ட நான்கு இணையதளங்களில் பிளஸ் டூ தேர்வு முடிவுகளை மாணவர்கள் பார்க்கலாம் என்பது குறிப்பிடப்பட்டது.

www.dge.tn.gov.in

www.tnresults.nic.in

www.dge1.tn.nic.in

www.dge2.tn.nic.in

கடந்த மார்ச் 13ஆம் தேதி பிளஸ் டூ தேர்வு தொடங்கிய நிலையில் ஏப்ரல் மூன்றாம் தேதி முடிவடைந்தது. தமிழகத்தில் இந்த தேர்வை 4,33,000 மாணவர்களும் நாங்கள் 16,000 மாணவர்களும் என மொத்தம் 850 ஆயிரம் மாணவிகள் தேர்வு எழுதி உள்ளனர்

இன்று காலை 9.30 மணி அளவில் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் பிளஸ் டூ தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார். தேர்வு முடிவு வெளியான பின் மாணவர்கள் தங்களுடைய தற்காலிக மதிப்பெண் சான்றிதழை அந்தந்த பள்ளிகளில் அன்றைய தினமே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் மாணவர்களுக்கு அவர்களுடைய செல்போனில் குறுஞ்செய்தி வாயிலாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசு தேர்வு துறை தெரிவித்துள்ளது

அது மட்டும் இன்றி மாணவர்கள் ஒவ்வொரு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள தேசிய தகவல் மையத்திலும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். பிளஸ் டூ தேர்வு முடிவு இன்று வெளியாக இருப்பதை அடுத்து மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.