தொடர்ந்து 5வது நாளாக உயர்ந்த பெட்ரோல், டீசல்: கடும் அதிர்ச்சி
சென்னையில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ச்சியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்று ஐந்தாவது நாளாகவும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இதனை அடுத்து பெட்ரோல் விலை 102 ரூபாயை நெருங்கி உள்ளது என்பதும் டீசல் விலை 97 ரூபாயை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் உயர்வு மற்றும் பெட்ரோல் டீசல் விலை நிலவரங்களை தற்போது பார்ப்போம்.
சென்னையில் இன்று பெட்ரோல் விலை 26 காசுகள் உயர்ந்துள்ளது. இதனை அடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.27 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் டீசல் விலை 33 காசுகள் உயர்ந்துள்ளது. அடுத்து ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.96.93 என்ற விலையில் விற்பனையாகிறது.
