இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மீண்டும் ரூ.100ஆ?

பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த இரண்டு நாட்களாக உயர்ந்து கொண்டு வருவதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் சற்றுமுன் அறிவித்துள்ளன

சென்னையில் பெட்ரோல் விலை இன்று 22 காசுகள் உயர்ந்து உள்ளதை அடுத்து ரூ.99.80 என விற்பனையாகி வருகிறது. அதே போல் சென்னையில் டீசல் விலை 28 காசுகள் உயர்ந்து உள்ளது எடுத்து ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 95.05 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

சென்னையில் தொடர்ச்சியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது என்பதும் டீசல் விலை 95 ரூபாயைத் தாண்டிவிட்டது என்பதும் பெட்ரோல் விலை 100 ரூபாயை நெருங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இதனால் பொதுமக்கள் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment