கணிசமாக குறைந்தது பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் எவ்வளவு?

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்ததன் காரணமாகவும் மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை குறைத்து அதன் காரணமாகவும் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமாக குறைந்துள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் இன்று அறிவித்த அறிவிப்பின்படி இன்று சென்னையில் பெட்ரோல் விலை 5 ரூபாய் 26 காசுகள் ஒரு லிட்டருக்கு குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் டீசல் விலை 11 ரூபாய் 16 காசுகள் குறைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40 எனவும் டீசல் விலை ரூ.91.43 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடப்பட்டது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமாக குறைந்து உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது பொது மக்களுக்கு கிடைத்த தீபாவளி பரிசாக இந்த விலை குறைப்பு கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment