Connect with us

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்

பெட்ரோல்

தமிழகம்

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வரும் நிலையில் இன்றும் பெட்ரோல் விலை 31 காசுகளும் டீசல் விலை 34 காசுகளும் உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கச்சா எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் உயர்ந்து கொண்டே வருவதை அடுத்து சென்னையிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது/ அந்த வகையில் ஏற்கனவே பெட்ரோல் விலை 106 ரூபாயை தாண்டி விட்ட நிலையில் இன்று 31 காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து ரூ.106.35 என்ற விலைக்கு பெட்ரோல் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் டீசல் விலை இன்று 34 காசுகள் உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.102.5சென்னையில் என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் உயர்ந்து கொண்டே செல்வது காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் ஏழை எளிய மக்கள் கடும் சிக்கலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top