பெட்ரோல் விலை இன்றும் உயர்வு: ரூ.102ஐ நெருங்கியது டீசல்

கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்றும் பெட்ரோல் விலை மற்றும் டீசல் விலை கணிசமாக உயர்ந்துள்ளது பொது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

நேற்று பெட்ரோல் விலை ரூ.105க்கும் மேலாகவும், டீசல் விலை ரூ.101க்கும் மேலாக விற்பனையான நிலையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்து உள்ளது என்பதும் டீசல் விலை 34 காசுகள் உயர்ந்து உள்ளது என்பதும் குறிப்பிடதக்கது
எண்ணெய் நிறுவனங்களின் இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்த விவரங்களை தற்போது பார்ப்போம்

சென்னையில் இன்று பெட்ரோல் விலை ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.105.43 என்றும், டீசல் விலை ரூ.101.59 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment