சென்னையில் தாறுமாறாக உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில மாதங்களாக உயர்ந்துகொண்டே வரும் நிலையில் இன்று தாறுமாறாக உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

சென்னையில் கடந்த சில நாட்களாக தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் மூன்று நாட்களுக்கு ஒரு ரூபாய் என்ற நிலையில் உயர்ந்து கொண்டே வருவதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உச்சத்திற்கு சென்று உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 29 காசுகள் உயர்ந்துள்ளதால் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.105 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் டீசல் ஒரு லிட்டர் 33 காசுகள் உயர்ந்து உள்ளதால் ஒரு லிட்டர் டீசல் ரூபாய் ரூ.101.25 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment