சென்னையில் முதல்முறையாக ரூ.100ஐ கடந்த டீசல் விலை!

சென்னையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துகொண்டே வந்தது என்பதும் பெட்ரோல் விலை ஏற்கனவே 100 ரூபாயை தாண்டி விட்ட நிலையில் டீசல் விலை 100 ரூபாயை நெருங்கிக் கொண்டு வந்தது என்பதையும் பார்த்து வந்தோம்.

இந்த நிலையில் சர்வதேச சந்தையில் மீண்டும் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துள்ளதை அடுத்து சென்னையிலும் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இன்று சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு குறித்த தகவலை தற்போது பார்ப்போம். சென்னையில் இன்று பெட்ரோல் விலை 30 காசுகள் உயர்ந்து உள்ளது. இதனை அடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 104.22 ரூபாய் என்ற நிலையில் விற்பனையாகிறது. சென்னையில் இன்று டீசல் விலை 33 காசுகள் உயர்ந்துள்ளது. இதனை அடுத்து சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.100.25 என்ற விலைக்கு விற்பனையாகிறது.

சென்னையில் முதல் முறையாக வரலாறு காணாத வகையில் 100 ரூபாயை டீசல் விலை தொடங்கியுள்ளதை அடுத்து வாகன ஓட்டிகள் பெரும் கலக்கம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment