முதல்முறையாக ரூ.100க்கு சென்றது டீசல் விலை: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

சென்னையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெட்ரோல் விலை ரூபாய் 100ஐ தாண்டியது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் வரலாற்றில் முதல் முறையாக டீசல் விலையும் ரூபாய் 100ஐ நெருங்கியுள்ளது வாகன ஓட்டிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டுவந்தது என்பதும் நேற்றும் நேற்று முன்தினமும் ஒரே விலையில் இருந்தது என்பதையும் பார்த்தோம்

இந்த நிலையில் இன்று பெட்ரோல் விலை 30 காசுகள் மற்றும் டீசல் விலை 34 காசுகள் உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனை அடுத்து டீசல் விலை 100 ரூபாயை நெருங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

சென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரங்களை தற்போது பார்ப்போம்

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 103.31 என்றும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.99 26 என்றும் விற்பனை ஆகி வருகிறது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print