உச்சத்திற்கு சென்றது பெட்ரோல், டீசல் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி

தமிழகத்தில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை உச்சத்திற்கு சென்று உள்ளதை அடுத்து வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் உயர்வு. இதனால் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.10 என்று நிர்ணயம்

சென்னையில் டீசல் விலை 34 காசுகள் உயர்வு. இதனால் ஒரு லிட்டர் டீசல் விலை 97.93 ரூபாய் என நிர்ணயம்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment