பெட்ரோல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வரும் நிலையில் இன்றும் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வு காரணமாக கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது என்பதும் இதனை அடுத்து பெட்ரோல் விலை 106 ரூபாயை தாண்டி விட்டது என்பதும் டீசல் விலை 102 ரூபாயை தாண்டி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் விலை 31 காசுகள் உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனால் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.106.66 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

ஆனால் அதே நேரத்தில் டீசல் விலையில் என்று எந்தவித மாற்றமும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் நேற்றைய விலை ரூ.106.56 என்ற விலையிலேயே டீசல் விலை விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏறுமுகத்தில் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment