முன்பு அறிவிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் நேற்றைய தினத்தோடு முடிவுக்கு வந்தது. இதனால் பிப்ரவரி 16ம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாட்டில் பல்வேறு தளர்வுகள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அந்த ஆலோசனையில் பிப்ரவரி 16ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள மழலையர் நர்சரி பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் இன்று தமிழகத்தில் சுமார் 20 ஆயிரம் மழலையர் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. தங்களது வாழ்க்கையில் முதல்முறையாக இன்றைய தினமே மழலையர் பள்ளி தருணத்தை எதிர்கொண்டு வருகிறார்கள் .இதனால் பல இடங்களில் மழலையர்களின் அடம்பிடிக்கும் செயலும் நிகழ்ந்து கொண்டுதான் வருகிறது.
இந்த கொரோனா பாதிப்பு காலத்தில் மழலையர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது பெரும் சர்ச்சையாக எழுந்துள்ளது. இருப்பினும் இன்று தமிழகத்தில் உள்ள பெரும்பாலான இடங்களில் மழலையர் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மழலையர்களுக்கு மாஸ்க் தேவையில்லை என்று கூறியுள்ளார். மழலையர் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு முக கவசம் கட்டாயமில்லை என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
புற்றுநோய் பாதிப்பால் ஏற்படும் இழப்புகளை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். விபத்துக்களால் ஏற்படும் மரணம் கடந்தாண்டை விட இந்தாண்டு குறைந்துள்ளது என்று சென்னையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டி அளித்தார்.