இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில்: அதிரடி அறிவிப்பு

இன்று இரவு 12 மணிவரை மெட்ரோ ரயில் இயங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது பொது மக்களுக்கு பெரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுதபூஜை விடுமுறை இன்று முதல் நான்கு நாட்கள் விடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் இருந்து இலட்சக்கணக்கானோர் தங்கள் சொந்த ஊரை நோக்கி இன்று பயணம் செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக கோயம்பேடு, சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம் மற்றும் விமான நிலையம் ஆகிய பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்தநிலையில் இந்த நான்கு இடங்களுக்கும் செல்லும் ஒரே போக்குவரத்து மெட்ரோ ரயில் என்பதால் மெட்ரோ ரயில் இன்று இரவு 12 மணி வரை இயங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் தங்களது நன்றியை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

ஆனால் அதே நேரத்தில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment