கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.
அதன்படி வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும் இன்றைய தினம் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் தர்மபுரி 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் நாளை மறுநாள் நவம்பர் 7ஆம் தேதி முதல் மூன்று தினங்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக் கடலில் நவம்பர் 9ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது.