இன்னைக்கு நைட்டு ஒரே மழைதான்!! இன்னும் 2 மணி நேரத்தில் இந்த 6 மாவட்டங்களுக்கு;

அந்தமான் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது ஓரிரு நாட்களில் புயலாக வலுப்பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக தமிழகத்தில் கோடை காலத்தில் மழை பெய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வானிலை ஆய்வு மையமும் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் குறிப்பிட்ட ஆறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி விருதுநகர், சேலம் இரண்டு மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், ராமநாதபுரம், சிவகங்கை, தர்மபுரி, ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் லேசான மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த ஆறு மாவட்டங்களில் இரவு நேரத்தில் மழை பெய்தால் வெயிலின் உஷ்ணம் தணியப்படும் என்று தெரிகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment