இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு;

கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக நம் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. எதிர்பாராத விதமாக இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது.

மழை

இதனால் பல மாவட்டங்களில் விவசாய நிலங்கள், வீடுகள் என அனைத்தும் மழை நீருக்குள் மூழ்கியது. இவ்வாறு பெய்யும் வடகிழக்கு பருவமழை இன்று இரவிலும் தமிழகத்திற்கு தொடர உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இன்று இரவு தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

அதன்படி தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய வட தமிழக மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment