Connect with us

இன்று முருகனுக்குரிய தைப்பூச திருநாள்!- கொரோனா கட்டுப்பாடுகளால் பக்தர்கள் தவிப்பு!

palani

செய்திகள்

இன்று முருகனுக்குரிய தைப்பூச திருநாள்!- கொரோனா கட்டுப்பாடுகளால் பக்தர்கள் தவிப்பு!

இன்று முருகனுக்குரிய தைப்பூச திருநாள்!- கொரோனா கட்டுப்பாடுகளால் பக்தர்கள் தவிப்பு!

இன்று முருகனுக்குரிய தைப்பூச திருநாள் கொண்டாடப்படுகிறது. முருகன் ஆண்டிக்கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் போது அன்னை பார்வதி தேவி, அசுரர்களை அழிப்பதற்காக, ஞானவேல் வழங்கிய திருநாள் தான் தைப்பூச திருநாள் ஆகும்

தைப்பூச திருநாள் தமிழ்நாட்டில் உள்ள மற்ற முருகன் கோவில்களை விட அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் தான் வெகு விமரிசையாக நடைபெறும்

தென்மாவட்ட மக்கள் தொடர்ந்து பழனிக்கு பாதயாத்திரை சென்று கொண்டே இருப்பார்கள். பலர் பழனிக்கு காவடி எடுத்து நேர்த்தி செலுத்துவர்.

தைப்பூசம் முடிந்தாலும் தொடர்ந்து பழனிக்கு காவடி எடுத்து சில  நாட்களுக்கு பக்தர்கள் வந்து கொண்டே இருப்பர்.

இன்று தைப்பூசம் முக்கிய கோவில்களில் கொண்டாடப்பட்டாலும் கொரோனா கட்டுப்பாடுகளால்  பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிலையில் பழனிக்கு வரும் பக்தர்கள் ஸ்வாமியை காத்திருந்து கோவில் திறந்த உடன் தரிசிக்க காத்திருக்கின்றனர்.

பலர் மலையை பார்த்து கும்பிட்டு விட்டு பழனியை விட்டு செல்கின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top