Connect with us

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்- இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்-முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் இன்று!

Mgr 1

செய்திகள்

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்- இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்-முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் இன்று!

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்- இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்-முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் இன்று!

1917ம் ஆண்டு ஜனவரி 17ம் நாள் இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தவர் எம்.ஜி,ஆர் அவர்கள். கோபால மேனன் சத்யா தம்பதிகளுக்கு இவர் மகனாக பிறந்தார்.

1935ல் ஆரம்பித்து 1978ம் ஆண்டு வரை சினிமாவில் ஜொலித்தார்.

முதல் படமாக சதி லீலாவதியும் முதல் வெற்றிப்படமாக  1947ல் ராஜகுமாரியும் வெளியானது.

தொடர்ந்து வெற்றிப்படங்களாக பயணித்தார் எம்.ஜி.ஆர்

திராவிட கட்சிகளில் பற்றுக்கொண்டு திமுகவில் இணைந்து செயல்பட தொடங்கிய எம்.ஜி.ஆர், பின்பு திமுகவில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக 1971ம் ஆண்டு  அந்த கட்சியை விட்டு விலகி தனியாக அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை தொடங்கினார்.

எம்.ஜி.ஆருக்கு சினிமாவில் அதிக ரசிகர்கள் இருந்ததால் அவர்கள் அனைவரும் அதிமுகவில் இணைந்து அக்கட்சியை பலப்படுத்தினர்.

எம்.ஜி.ஆர் தொடர்ந்து முதல்வராக இருந்த காலத்தில் அவர் ஏழை மக்களின் இதய தெய்வமாக போற்றப்பட்டார்.

அவரது ஆட்சிக்காலத்தில் பள்ளி  மாணவர்களுக்கு சீருடை, செருப்பு, பல்பொடி என பல பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது.

மக்களின் முதல்வராக எம்.ஜி. ஆர் விளங்கினார்.

எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களுக்கு சிறுநீரக பிரச்சினைகள் இருந்தது. சிறுநீரகக் கோளாறு காரணமாக 1984ஆம் ஆண்டு அக்டோபரில், அமெரிக்காவின் புரூக்ளின் நகரில் உள்ள டவுன்ஸ்டேட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதே ஆண்டு, சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொண்டார். இறுதியாக 1987ல் நோய்வாய்ப்பட்டார். டிசம்பர் 24ஆம் தேதி, 1987ல் இயற்கை எய்தினார்.

எம்.ஜி. ஆர் கடைசியாக தமிழில் நடித்த படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் என்ற திரைப்படம் ஆகும்.

அதன் பிறகு தமிழில் நடிக்கவில்லை. அன்பே வா, அடிமைப்பெண், ஆயிரத்தில் ஒருவன், நாடோடி மன்னன், தர்மம் தலைகாக்கும் என எம்.ஜி.ஆரின் எந்த ஒரு படமும் இன்றும் திரையில் போட்டாலும் புதிய திரைப்படம் போல அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பார்த்து வருகிறார்கள்.

இன்று எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் முதல்வர்கள் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top