இன்று தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்! நவம்பர் மாத இறுதிக்குள் 100% தடுப்பூசி இலக்கு!!

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அதன் பின்னர் சனிக்கிழமை தோறும் கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு அதிக அளவில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தது.

தடுப்பூசி முகாம்

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு இனி தமிழகத்தில் வாரம் இரண்டு நாள் மெகா தடுப்பூசி முகாம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு அதிகளவில் தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்றைய தினம் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு பெருவாரியான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறிருக்கையில் தமிழகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை மயிலாப்பூரில் உள்ள தடுப்பூசி முகாமுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

சுப்பிரமணியன்

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பல முக்கிய அறிவிப்புகளை கூறியுள்ளார். அதன்படி இரண்டாவது டோஸ் போடாத 72 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

தடுப்பூசி முகாம்கள்  மட்டுமின்றி மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார். செவிலியர்கள் அனைவரும் தடுப்பூசி போடும் பணிகளை விரைந்து செய்து முடிக்க அறிவுறுத்தல் செய்துள்ளதாகவும் அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

நவம்பர் மாதம் இறுதிக்குள் 100% முதல் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார். இதற்கு ஒன்றிய அரசு ஒத்துழைப்பு அளிக்குமாறு சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment