இன்று போகிப்பண்டிகை – போகிப்பண்டிகையின் தத்துவப்படி இன்று எதை எதை எரிக்கலாம்?

மார்கழி மாதத்தின் கடைசி நாளான இன்று போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதாவது மார்கழி மாதத்தின் இறுதி நாளில் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

போகிபண்டிகையின் தத்துவம் என்ன என்றால் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதுதான். அப்படி என்றால் மனதில் ஏற்கனவே இருந்த கெட்ட எண்ணங்கள் அழிந்தும் புதிய நல்ல எண்ணங்கள் பிறப்பதை குறிப்பதைத்தான் போகிப்பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

ஆனால் அதைவிடுத்து குப்பை கூளம், டயர்களை போட்டு எரிப்பதால் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை.

மனதில் உள்ள தீய எண்ணங்களை பொசுக்கி, மனதில் உள்ள காமம், விரோதம், குரோதம், பொறாமை போன்ற விசயங்களை நம் மனதிலேயே பொசுக்க வேண்டும் என்பதுதான் தத்துவம்.

ஆகவே இன்று போகி என்பதால் மனதை இறைவனிடம் நிலை நிறுத்தி என் மனதில் உள்ள கெட்ட பழக்கங்களை எல்லாம் விட்டு விட போகிறேன் என இறைவனிடம் சபதம் எடுத்துக்கொள்ளுங்கள் நாளை தையில் பிறக்கும் பொங்கலானது வளமான வாழ்வை தரட்டும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment