இன்று பைரவ அவதாரம் தோன்றிய மஹா கால பைரவாஷ்டமி

இன்று மஹா காலபைரவாஷ்டமி கொண்டாடப்படுகிறது. சிவபெருமானின் அம்சமாக பல கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியவரே பைரவர். இன்றும் உலகை காப்பவராக பைரவரே போற்றி வணங்கப்படுகிறார்.

பைரவரை வணங்கினால் அனைத்தும் நலமாகும் சனி தோஷம் மற்றும் அனைத்து தோஷங்களிலும் கடுமையான கர்ம வினைகளில் இருந்தும் விடுவிக்கும் கலியுக கடவுளாக பைரவர் விளங்குகிறார்.

முன்பெல்லாம் அஷ்டமி என்றால் மோசமான நாளாக கருதிய மக்கள் கடந்த சில வருடங்களாக தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு உகந்த நாள் என்று கோவில்களில் வழிபாடு நடத்தி வருகிறார்கள். தேய்பிறை அஷ்டமி அன்று பைரவர் சன்னதிகளில் கடும் கூட்டம் இருந்து வருகிறது. கடும் நெரிசலில்தான் தேய்பிறை அஷ்டமி அன்று நாம் ஸ்வாமி தரிசனம் செய்ய முடியும்.

மற்றொரு புறம் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் என்ற செல்வத்தை தரும் பைரவர் வழிபாடும் திண்டுக்கல் தாடிக்கொம்பு செளந்தர்ராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் நடந்து வருகிறது. சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடும் தற்போது புகழடைந்து வருகிறது.

கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை அஷ்டமியே பைரவ அவதாரம் தோன்றிய நாளாக கருதப்படுகிறது. இது மஹா கால பைரவாஷ்டமி என வழங்கப்படுகிறது.

இன்று மஹா கால பைரவாஷ்டமி கோவிலுக்கு சென்று பைரவரை வணங்கினால் நம் வேண்டுதல்களை கட்டாயம் பைரவர் நிறைவேற்றி தருவார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment