முதல்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 என இரண்டு கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது

9 மாவட்டங்களில் முதற்கட்டமாக 39 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 78 மாவட்ட ஊராட்சி உறுப்பினர், 755 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், 1577 ஊராட்சித் தலைவர், 12,252 ஊராட்சி உறுப்பினர் பணியிடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த நிலையில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கியுள்ளதாகவும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்க காத்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது

கொரோனா பாதிப்பு அறிகுறி உள்ளவர்களுக்கு மட்டும் கடைசி ஒரு மணி நேரத்தில் அதாவது மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

7921 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்பதும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் செங்கல்பட்டு விழுப்புரம் கள்ளக்குறிச்சி நெல்லை தென்காசி வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இன்றைய முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்தவுடன் அக்டோபர் 9ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் என்பதும் அக்டோபர் 12ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்று மாலைக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment