தமிழில் வீணை எஸ்.பாலச்சந்தர் இயக்கிய பொம்மை படத்தில் நீயும் பொம்மை நானும் பொம்மை நினைச்சு பார்த்தா எல்லாம் பொம்மை என்ற பாடலை பாடியதன் மூலம் அறிமுகமானவர் பாடகர் ஜேசுதாஸ்.
தற்போது 82 வயதாகும் ஜேசுதாஸ் தமிழில் பல இனிய பாடல்களை பாடியுள்ளார்.
என் ஜீவன் பாடுது, எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது, ஈரமான ரோஜாவே என பல அற்புதமான பாடல்களை பாடியவர் கே.ஜே ஜேசுதாஸ்.
இவர் அய்யப்பன் கோவிலின் தீவிர பக்தர். கிறித்துவ மதத்தில் பிறந்தாலும் அய்யப்பன் பாடல்களை பாடுவதில் வல்லவர் பொய்யின்றி மெய்யோடு நெய்கொண்டு போனால் அய்யனை நாம் காணலாம் போன்ற உணர்வுடன் பாடிய இவரின் வரிகளே போதும்.
மேலும் அய்யப்பன் கோவில் நடை அடைக்கும்போது பாடப்படும் ஹரிவராசனம் என்ற பாடலை கே.ஜே ஜேசுதாஸ்தான் பாடியுள்ளார் அந்த பாடலே இன்றும் அய்யப்பன் கோவிலில் இரவு ஒளிபரப்பபடுகிறது .
இவரது மகன் விஜய் ஜேசுதாசும் பாடகர். ஜேசுதாஸின் பாடல்கள் பெரும்பாலும் சோகமாக இருக்கும் சோகப்பாடல்கள் என்றாலே ஜேசுதாஸ்தான் என்று சொல்லுமளவு இருக்கும்.
இன்று பிறந்த நாள் காணும் பாடகர் ஜேசுதாஸ் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.