இன்று கார்த்திகை மாத சோமவாரம் கார்த்திகை சோமவாரம் என்றாலே சிறப்பு அதிலும் சோமவாரத்தில் பிரதோஷம் வந்தால் மிகவும் சிறப்பு. கார்த்திகை சோமவாரத்தில் விரதம் இருப்பவர்கள் பலர். சந்திரனை தலையில் அணிந்துள்ள சிவபெருமானுக்கு சந்திர பகவானுக்கு உரிய நாள் திங்கட்கிழமை.
கார்த்திகை சோமவாரம் விரதம் இருந்தால் அந்த சிவனுக்கு பிடித்த நபராக நாம் மாறுவது உறுதி.
சந்திர பகவான் தனது குஷ்ட ரோக நோய் சிவபெருமானின் அருளால் நீங்கி சிவபெருமானின் தலையிலேயே வசித்து வருகிறாராம். அதனால் சந்திரனுக்கு உரிய திங்கட்கிழமையான கார்த்திகை சோமவாரம் பிரசித்தமாகும்.
கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமையில்தான் 108 சங்கில் சிவனுக்கு அபிசேகம் நடைபெறும். 16 மாதம் கார்த்திகை சோம வார விரதம் இருந்து சிவனை வழிபட்டால் அனைத்து நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.
கார்த்திகை சோமவாரம் ஒன்றான திங்கட்கிழமை வரும் நாட்களில் சோமவார விரதத்தை அனுஷ்டிக்க ஆரம்பித்து தொடர்ந்து 16 மாதங்கள் திங்கட்கிழமைகளில் மட்டும் சிவனை நினைத்து விரதம் இருக்கலாம். மாலையில் கோவிலுக்கு சென்றுவிட்டு வந்து உணவருந்தி விரதத்தை நிறைவு செய்யலாம்.
இன்று சோமவாரமும் நாள் இன்று விரதத்தை ஆரம்பியுங்கள் மிகவும் நல்ல விசேஷமான நாள்.
மாலை நேரத்தில் சிவன் கோவில் சென்று வழிபடுங்கள் நல்லதே நடக்கும்