இன்று முருகனுக்குரிய வைகாசி விசாக திருநாள்

1e12fb7778fc0e74b7b79c15f11a5b67

முருகனின் அவதார திருநாளே வைகாசி விசாக திருநாளாகும். இந்த வைகாசி விசாகம் முருக பக்தர்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் பழனி, திருச்செந்தூர், திருத்தணி, திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, குன்றக்குடி, மருதமலை, ஸ்வாமி மலை,சிறுவாபுரி, எட்டுக்குடி, சிக்கல், சிவன்மலை, சென்னிமலை என்று பல முருகன் கோவில்கள் உள்ளன.

இம்முருகன் கோவில்கள் அனைத்திலும் இன்றைய வைகாசி விசாக திருநாள் களை கட்டும். வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தில் வரும் சிறப்பு நாள் இதுவாகும். விசாகம் ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு கூடியதொன்று. இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம். இந்நாள் சோதி நாள் எனவும் அழைக்கப்படுவதுண்டு. உயிர்களுக்கு நேரும் இன்னலை நீக்கும் பொருட்டு சிவன் ஆறுமுகங்களாய்த் தோன்றி தம் திருவிளையாடலால் குழந்தையானது இந்நாளில். மக்கள், பிராணிகள், தாவரங்கள் எல்லாம் ஓருயிராகி இணைக்கப்பட்டிருக்கும் உண்மையை விளக்குதலே இந்நாளின் கருத்தாகும்.

தற்போது கோவில்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு எங்கும் செல்ல முடியாத நிலை உள்ளது. பொதுவாக வைகாசி விசாகத்திற்கு காவடிகள் எல்லாம் கோவில்களில் களை கட்டும் தற்போது கோவில்கள் அடைக்கப்பட்டுள்ளதால் மிக மோசமான காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். இந்த நாளில் கோவிட் போன்ற கொடிய தொற்றில் இருந்தும் இதுவரை இல்லாமல் தற்போது பெருந்துயரத்தை தந்து கொண்டிருக்கும் இந்த மோசமான காலக்கட்டம் கடந்து செல்ல வேண்டும் என முருகப்பெருமானை வேண்டிக்கொள்வோம் அவரின் கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் போன்ற கவசங்களை பாடி முருகன் பிறந்த இந்த நன்னாளில் உலக மக்களை மக்களை காத்தருள செய்வோம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.