மறந்துடாதீங்க..! சொத்துவரி செலுத்த இன்றே கடைசி நாள்.. தாமதித்தால் அபராதம்..
சென்னை மாநகராட்சியில் ஆண்டுதோறும் சொத்துவரி செலுத்துவது வழக்கம். அதன் படி, 15 வது மத்திய நிதி குழுமம் பரிந்துரையின் படி, சென்னையில் சொத்துவரியினை உயர்த்துவதாக மாநகராட்சி ஆணையர் அறிவித்திருந்தார்.
அந்த வகையில் இனி வரும் காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை மாநகராட்சியில் உள்நாட்டு உற்பத்திக்கு ஏற்ப சொத்து வரி உயர்த்தப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் 2022-2023 ஆம் ஆண்டு முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை இன்றைய தினத்திற்குள் கட்டவேண்டும் என அறிவிக்கப்பட்டது.
ஏற்கனவே செலுத்தி வரும் கட்டணம் விகிதத்திலேயே செலுத்தலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதனை கட்ட தவறும்பட்சத்தில் 2 % அபராதத் தொகையினை சொத்து வரியுடன் சேர்த்து வசூலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த கட்டணங்களை மண்டல அலுவலகங்கள் வார்டு அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்கள், பேடிஎம், கிரெடிட், டெபிட் கார்ட், நம்ம சென்னை செயலி, கிரெடிட் அல்லது டெபிட் கார்ட் மூலம் சொத்துவரியினை செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
