விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு: பயிர் காப்பீடு செய்ய இன்றே கடைசி நாள்!

முன்னொரு காலத்தில் விவசாயிகள்தான் மிகுந்த செல்வாக்கோடு காணப்பட்டனர். ஆனால் தற்போது விவசாயிகள் மத்தியில் பெரும் சோகம் எழுதிக்கொண்டே வருகிறது. குறிப்பாக பருவ நிலை மாற்றம் போன்றவைகள் விவசாயத்தை சீர்குலைக்க செய்கிறது.

நெல் மூட்டைகள்

இந்த நிலையில் தமிழகத்தில் பெய்த கன மழையால் பல பயிர்கள் நாசம் அடைந்தன. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையால் பெரும்பாலான விவசாய நிலங்கள் மழை நீருக்குள் மூழ்கி சேதமடைந்தன.

இதனால் பல விவசாயிகள் மிகுந்த நஷ்டம் அடைந்தனர். குறிப்பாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் நெல் மூட்டைகள்,பயிர்கள் என அனைத்தும் மழை நீரில் நனைந்து நாசமடைந்தன.

இவர்களுக்கு காப்பீட்டுத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி விவசாயிகள் அனைவரும் தங்களது பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு விவசாயிகளுக்கு கூறியுள்ளது.

இந்த பயிர் காப்பீட்டை செய்து கொள்ள இன்று நவம்பர் 15ஆம் தேதி தான் கடைசி நாள் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment