
தமிழகம்
மாணவிகளே உஷார்; இன்று தான் கடைசி நாள்!! உடனே விண்ணப்பியுங்கள்;
தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்த பின்பு பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகள் அமல்படுத்தப்படுத்தி கொண்டு வருகின்றன. இவ்வாறு உள்ள நிலையில் திடீரென்று தாலிக்கு தங்கம் திட்டம் மாற்றப்பட்டது.
அதற்கு பதிலாக உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதற்கு பலரும் கருத்துக்களை கூறியிருந்தாலும் மாணவிகளின் கல்வி மற்றும் முந்தைய திட்டத்தை விட பெரும் பயனுள்ளதாக காணப்படுகிறது.
இந்த நிலையில் இந்த திட்டத்திற்கு மாணவிகள் விண்ணப்பிக்க என்று தான் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க இன்று தான் கடைசி நாள்.
இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்திருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்திற்கு மாணவிகள் www.penkalvi.gov.in என்ற இணையதளம் மூலமாக நேரடியாக விமர்சிக்கலாம்.
