பான்-ஆதார் இணைப்புக்கு இன்றே கடைசி நாள்! தவறினால் என்னென்ன விளைவுகள்?

தற்போது ஆதார் எண்ணை அணைத்து அடையாள அட்டைகளுடன் இணைக்கப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக ஆதார் எண்ணை பான் கார்டு எண்ணோடு இணைப்பதற்கு இன்றைய தினமே கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தவறும் பட்சத்தில் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்ததோடு மட்டுமில்லாமல் பான் கார்டு முடக்கப்படும் என்றும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஆண்டு ஆதாருடன் பான் கார்டு இணைக்க நிதி மசோதா திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் கடந்த ஆண்டு முழுவதும் இந்தியாவில் கொரானாவின் அலை வீசிக் கொண்டிருந்தது. கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்த சூழலில் தற்போது மார்ச் 31-ம் தேதி இன்றைய தினம் தான் ஆதாருடன் பான் கார்டுடன் இணைக்க கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கால அவகாசத்திற்குள் இரண்டு எண்களையும் இணைக்க தவறும்பட்சத்தில் வருமான வரி சட்டத்தின் கீழ் பின்விளைவுகளை பார்க்கக்கூடும் என்று வருமான வரித்துறையினர் சமீபத்தில் தெரிவித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

50 ஆயிரத்திற்கு மேல் பணத்தை டெபாசிட் செய்தால் அல்லது பணத்தை எடுத்தால் பான் அவசியம் என்பதால் ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews