இன்று தமிழ்ப்புத்தாண்டு பிறந்தது- பிலவ வருடம்

caae38f784f979482d786e17b85129dd

இன்று தமிழ்ப்புத்தாண்டு பிறந்துள்ளது. உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் அனைவரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். சித்திரை முதல் பங்குனி வரை உள்ள மாதங்களும் பிரபவ முதல் அட்சய வரை உள்ள வருடங்களுமே தமிழ்ப்புத்தாண்டு ஆகும். இன்று பிறந்தது பிலவ வருடம் ஆகும்.

இதற்கு முன் பிலவ வருடம் 1961ல் வந்துள்ளது . இன்று பிறந்துள்ள பிலவ வருடத்தில் இருந்து கொரோனா அச்சத்தில் இருந்து முழுமையாக நீங்கி மக்கள் இன்பத்துடனும் சகல செளபாக்கியங்களுடனும் வாழ வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

சொல்லப்போனால் இதற்கு முன் பிலவ ஆண்டு வந்த 1961ம் ஆண்டு எப்படி அமைதியாக இருந்ததோ அதுபோன்ற ஒரு அமைதியைத்தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அப்படியொரு அமைதியை இறைவன் அளிப்பார் என நம்புவோம். அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள். இன்று கோவிலுக்கு சென்றால் பஞ்சாங்கம் வாசிப்பார்கள் அதை கேட்பது நல்லது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.