இன்று 5 ஆண்டுக்குப்பின் அரசு மருத்துவர்களின் உரிமை மீட்பு! நாளை நீட் தேர்வு!!-ஸ்டாலின் உறுதி;
இன்றைய தினம் உச்சநீதிமன்றம் தனியார் மருத்துவர்கள் தொடர்ந்து மேல்முறையீட்டுக்கு தக்க பதிலடியை கொடுத்திருந்தது. அதன்படி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த உத்தரவு தொடரும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இதனால் தமிழகத்தில் இது குறித்து பல்வேறு கருத்துக்கள் எழுப்பப்பட்டு வருகிறது. அதுவும் குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் பேட்டி கொடுத்தார்.
அதில் 2017 ஆம் ஆண்டு அதிமுக அரசு 100 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசிடம் தாரைவார்த்து என்று கூறினார். இந்நிலையில் இன்றைய தினம் இத்தகைய உத்தரவு அரசு மருத்துவர்கள் மத்தியில் பெரும் சந்தோசத்தை கிளப்பியுள்ளது.
இவ்வாறு உள்ள நிலையில் தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் இது குறித்து தங்களது கருத்தினை கூறியுள்ளார். அதன்படி மருத்துவ மாணவர்கள் இழந்த உரிமை ஐந்து ஆண்டுக்கு பின் திமுக ஆட்சியின் சட்ட போராட்டங்களால் தான் மீண்டும் கிடைத்துள்ளது என்று கூறினார்.
தற்போது வெற்றியை போல் நீட்தேர்வு போராட்டத்திலும் சமூக நீதி நிச்சயம் வெல்லும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நீட்தேர்வு போராட்டத்தில் வெற்றி பெற திமுக அரசு தொடர்ந்து சட்டப்படி போராட்டம் நடத்தும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
