இன்று பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு! எதிர்க்கட்சிகளின் திட்டம் என்ன?
பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி இந்தியாவில் 2022-2023 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெடை இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த முறையும் காகிதம் இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்யப்பட்டது.
இதில் பல முக்கிய அறிவிப்புகளும் பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு பற்றியும் அறிவிப்பு வெளியானது. அதுவும் குறிப்பாக கிரிப்டோகரென்ஸி, வேளாண்மை, கல்வி, மருத்துவம் உள்ளிட்டவற்கான நிதி ஒதுக்கீடு இதைப் பற்றி மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்தார்.
இந்த நிலையில் இந்த பட்ஜெட் தொடரின் 2வது அமர்வு எப்போது என்று எம்பிக்கள் காத்து உள்ள நிலையில் அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி அளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இன்று முதல் நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு இன்று முதல் தொடங்குகிறது. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை தொடர்ந்து மக்களவையிலும் மாநிலங்களவையிலும் ஒரே நேரத்தில் செயல்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் வட்டி குறைப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வில் சில முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
